வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் ,இறப்பு சான்றிதழ் நகல்களை இலங்கையர்களுக்கு வழங்க அரசு திட்டம்

1 month ago



வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் வசதிக்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் இருந்து பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் நகல்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

குவைத், ஜப்பான், கட்டார் தூதரகங்கள், அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன், கனடாவின் ரொறன்ரோ, இத்தாலியின் மிலன், டுபாய் ஆகிய நகரங்களில் அமைந்துள்ள துணைத் தூதரகங்கள் ஊடாக இந்த முன்னோடித் திட்டம் முன்னெடுக்கப் படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டிலுள்ள எந்த வொரு பிரதேச செயலகத்திலிருந்தும் பிறப்பு, திருமணம் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை பெறுவதற்கு அமைக்கப்பட்டுள்ள முறைமைக்கு ஏற்ப வெளிநாட்டு தூதரகங்கள் மூலம் இந்த சான்றிதழ்களை      வழங்கும் வகையில் பதிவாளர் நாயகம் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சால் கூட்டாகப் பராமரிக்கப்பட்டு இ-பீ எம்.டீ தரவுக் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை      எடுக்கப்பட்டுள்ளது.

அரசாங்க சேவைகளை டிஜிற்றல் மயமாக்கும் திட்டத்திற்கான            பிரவேசமாக இது அமைந்துள்ளது. 

அண்மைய பதிவுகள்