திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனையில் ஒருவர் மருதங்கேணிப் பொலிஸாரால் கைது
1 day ago
திருட்டுச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படும், வடமராட்சி - குடத்தனை, மாளிகைத்திடல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதங்கேணி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனியார் கம்பனியின் சொத்துகள், ஆவணங்கள், தொலைபேசி மற்றும் ஒரு தொகை பணம் என்பனவற்றை திருடிய சம்பவத்தின் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரை கைது செய்யச் சென்ற பொலிஸாரைத் தாக்கியதுடன் தப்பியோட முயன்றதாகவும் பொலிஸார் கூறினர்.
பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய குறித்த நபரை மருதங்கேணி பொலிஸார் தடுத்து வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.