கனடாவின் பிக்கரிங் பகுதியில் தாயை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 25 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

1 month ago



கனடாவின் பிக்கரிங் பகுதியில் தாயை படுகொலை செய்த குற்றச்சாட்டில் 25 வயதான மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிக்கரிங்கின் வொக்ஸ்வுட் பகுதியில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் டர்ஹம் பிராந்திய பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பகுதியிலிருந்து பெண் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

படுகாயம் அடைந்த குறித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் 64 வயதான ஷீலா ஹெர்கியூலிஸ் என்ற பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 25 வயதான எய்டன் ஹெர்கியூலிஸ் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டில் டர்ஹம் பிராந்தியத்தில் இடம் பெற்ற பத்தாவது படுகொலை சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவ இடத்திலேயே சந்தேகநபரை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது. 



அண்மைய பதிவுகள்