கனடாவிற்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கணிசமாக குறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 months ago


கனடாவிற்கு வருகை தருவோரின் எண்ணிக்கையை ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் கணிசமாக குறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் உரிய ஆவணங்களுடன் அதிகாரிகளை நாடினாலும் அதிக எண்ணிக்கையிலான மக்களை அங்குள்ள நிர்வாகம் திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. அத்துடன் பயணிகள் மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களுக்கான விசா அனுமதிப்பதும் குறைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதன் பின்னணியில் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் ஆதாயம் இருப்பதாக கூறுகின்றனர். லிபரல் அரசாங்கம் கனேடிய மக்களின் ஆத ரவை இழந்து வருவதாக வெளியான தகவலை அடுத்தே அதிகமாக வெளிநாட்டு பயணிகளுக்கான விசா மறுக்கப்பட்டு வருவதாகத் தெரியவந்துள்ளது.

கனடாவில் குடியிருப்பு பற்றாக் குறை மற்றும் குடியிருப்புகளுக்கான விலை உயர்வுக்குக் காரணம் புலம்பெயர்ந்தோர் எனக் குற்றஞ் சாட்டப்படும் நிலையிலேயே ஜஸ்டின் ட்ரூடோ அரசாங்கம் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

பொதுவாக புலம்பெயர் மக்களை ஆதரிக்கும் சமூகமாக கனேடியர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். ஆனால் சமீபத்தில் வெளியான கருத்துக் கணிப்பில், அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர் மக்களை அனுமதித்துள்ளதாக கனேடியர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதன் காரணமாகவே, அதிகாரிகள் தரப்பு தற்போது நடவடிக்கை முன் னெடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் 5,853 வெளிநாட்டவர்களுக்கு கனடா விசா மறுத்துள்ளது.

அத்துடன் ஆண்டு பிறந்து முதல் 7 மாதங்களில் சராசரியாக ஒவ் வொரு மாதமும் 3,727 வெளிநாட்டவர்களுக்கு கனடா அனுமதி மறுத்துள்ளது. இது 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 20 சதவிகிதம் அதிகம் என்றே கூறப்படுகிறது.

மேலும், கனேடிய விசா வைத்திருக் கும் 205 வெளிநாட்டவர்களுக்கு ஜூலை மாதம் அனுமதி மறுத்துள் ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கொள்கை மாற்றம் உட்பட பல்வேறு காரணங்கள் கூறப்படுக்கிறது.

இதேவேளை, கனடாவில் குடியேறும் மக்களுக்கான விசாவும் குறைக் கப்பட்டுள்ளது. அத்துடன் visitor visa விண்ணப்பங்களும் அதிக எண்ணிக்கையில் நிராகரிக்கப்பட்டுள்ளன. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் கல்வி மற்றும் வேலை விசாவும் அதிக எண்ணிக் கையில் மறுக்கப்பட்டுள்ளன.