கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் இரண்டு தமிழர்கள்

1 week ago



கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் Toronto நகர சபைக்கான இடைத் தேர்தல் ஒன்றை கடந்த வியாழக்கிழமை அறிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அறிவித்துள்ளனர்.

Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளியிட்டுள்ளனர்.

அனு ஸ்ரீஸ்கந்தராஜா தற்போது Scarborough-Rouge Park தொகுதிக் கான Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலராக பணியாற்றுகின்றார். நீதன் சான் தற்போது Toronto நகர பாடசாலை வாரிய தலைவராக உள்ளார்.

இந்தத் தொகுதிக்கான வேட்பு மனுக்கள் ஜூன் 23 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிய வருகிறது.

செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் ஆரம்பத்தில் வாக்களிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இடைத்தேர்தல் 550,000 டொலர் செலவில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.