இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம் --இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவிப்பு

இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம் இதற்கு உலகின் போக்குகளை சரியாக புரிந்துகொள்ளும் திறன் அவசியம்.”, இவ்வாறு இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
“உலகின் வேறு எந்த நாட்டையும் போல இலங்கையும் தனித்து செயல்பட முடியாது.
உலகளாவிய இணைப்பு - ஒன்றையொன்று சார்ந்திருந்தல் ஆகியன இந்த பூகோள மயமாக்கல் யுகத்திலும்கூட ஒரு விதிமுறையாக உள்ளது.
இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம்.
இதற்கு உலகின் போக்குகளை சரியாக புரிந்துகொள்ளும் திறன் அவசியம்.”, இவ்வாறு இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடந்த 'இனோவேசன் ஐலண்ட்' உச்சிமாநாட்டில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
முதலாவதாக இலங்கை ஒரு பெரும் மாற்றத்தின் தருணத்தில் உள்ளது. இலங்கையில் நடைபெற்ற இரண்டு தேர்தல்களின் மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அபிலாசைகள் தொடர்பில் புதிய விதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
கோவிட் பெருந்தொற்றும் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியும் பல தசாப்தங்களாக இலங்கையர்கள் எதிர்பார்த்த மாற்றங்களுக்கான தேவைகளை வெளிப்படுத்தியுள்ளன.
உலகின் வேறு எந்த நாட்டையும் போல இலங்கையும் தனித்து செயல்பட முடியாது.
உலகளாவிய இணைப்பும் ஒன்றையொன்று சார்ந்திருந்தல் ஆகியன இந்த பூகோளமயமாக்கல் யுகத்திலும் கூட ஒரு விதிமுறையாக உள்ளது.
வெளிநாட்டு சந்தையாக இருந்தாலும் சரி அல்லது முக்கிய இறக்குமதிகள் சுற்றுலா துறையாக இருந்தாலும் சரி முதலீடு மற்றும் தொழில்நுட்பமாக இருந்தாலும் சரி இலங்கை ஏனைய நாடுகளுடன் ஈடுபாட்டை பேணுவது அவசியம். இதற்கு உலகின் போக்குகளை சரியாக புரிந்து கொள்ளும் திறன் அவசியம் - என்றார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
