
மொன்ரியல் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் இறந்த 70 வயதுடைய இருவரின் மரணம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
70 வயது முதியவர் மற்றும் 71 வயது மூதாட்டி ஒருவரின் மரணம் வீட்டு தகராறு காரணமாக ஏற்பட்டதாக இருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
நேற்று காலை 9 மணியளவில் நகரின் கிழக்கே உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்குத் தாம் அழைக்கப்பட்டனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இருவரின் சடலங்களைப் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.
விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால் மேலதிக விவரங்கள் எதனையும் பொலிஸார் வெளியிடவில்லை.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
