இந்தோனேசிய ‘க்ரி சுல்தான் ஸ்கந்தர் முடா - 367' என்ற கடற்படை கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
3 months ago

இந்தோனேசிய கடற்படைக்கு சொந்தமான ‘க்ரி சுல்தான் ஸ்கந்தர் முடா - 367' என்ற கப்பல் நேற்று சனிக்கிழமை உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
இக்கப்பல் இந்தோனேசிய கடற்படையின் சிக்மா - கோர்வேட் ரகத்தைச் சேர்ந்ததாகும்.
நேற்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது.
120 பணியாட்களைக் கொண்ட இந்தக் கப்பல் 9071 மீற்றர் நீளமுடையதாகும்.
இதன் கட்டளை அதிகாரியாக கப்டன் அனுகேரா அன்னுறுல்லா செயற்படுகின்றார்.
இக்கப்பல் நாட்டிலிருக்கும் காலத்தில் நாட்டின் முக்கிய இடங்களுக்கு செல்லவுள்ளதோடு, நாளை திங்களன்று நாட்டிலிருந்து புறப்படவுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
