அமைச்சர் வியாழேந்திரனின் சகோதரன் மற்றும் செயலாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது.

5 months ago



அமைச்சர் வியாழேந்திரனின் சகோதரன் மற்றும் செயலாளர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது.

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோ தரன் மற்றும் செயலாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இருவரும் நேற்று மட்டக்களப்பு, கல்லடி கடற்கரையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆற்று மணல் அகழ்வுக்கான உரி மத்தை வழங்குவதற்காக ஒருவரிட மிருந்து 15 இலட்சம் ரூபாய் பணம் இவர்களுக்கு இலஞ்சமாக வழங்கப் பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கைது செய் யப்பட்ட இருவரையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மற்றைய சகோதரன் ஒருவர் இலஞ்சக் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்