கனடாவின் உயர் வீட்டு வாடகை காரணமாக, புதிதாக புலம்பெயர்ந்தவர்களில் பலர், வேறொரு மாகாணத்திற்குச் செல்வது அல்லது நாட்டை விட்டு வெளியேறுவது குறித்துத் திட்ட மிட்டு வருகிறார்கள் என சமீபத்திய கருத்துக் கணிப்பொன்று தெரிவிக்கிறது.
கனடாவில், வீட்டு வாடகைக் கொடுப்பது என்பது பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. Angus Reid Institute (ARI) என்னும் ஆய்வமைப்பு நடத்திய கருத்துக் கணிப்பொன்று, கனடாவின் உயர் வீட்டு வாடகை காரணமாக, கனேடியர்களில் 28 சதவிகிதத்தினர் வேறொரு மாகாணத்திற்குச் செல்வது குறித்து தீவிரமாக திட்டமிட்டு வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளது.
18 சதவிகிதத்தினர் ஆல்பர்ட்டா வுக்கு செல்ல திட்டமிட்டுவரும் நிலையில், நாட்டை விட்டு வெளியேறவும் சிலர் திட்டமிட்டு வருகிறார்கள்.
நாட்டில் 16 சதவிகிதம் பேருக்கு மட்டுமே சொந்த வீடு இருக்கும் நிலையில், வீடு வாங்குவது பிரச்சினையாக இருந்ததுபோக, இப்போது வீட்டு வாடகை கொடுப்பதே கடினமாக மாறியுள்ளது.
புதிதாக புலம்பெயர்ந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர், உயர் வீட்டு வாடகை காரணமாக, நாட்டை விட்டே வெளியேறுவது குறித்து திட்டமிட்டு வருகின்றனர் எனவும் அந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.