இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்துக்கு மீண்டும் நீடிப்பு வழங்குவதா தொடர்பில் அறிவிக்கப்படும்.

3 months ago


இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்துக்கு மீண்டும் நீடிப்பு வழங்குவதா என்பது தொடர்பில் எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் கடந்த 9ஆம் திகதி - திங்கட்கிழமை ஆரம்பமானது. கூட்டத் தொடரின் முதல் நாளிலேயே இலங்கை விவகாரம் விவாதிக்கப்பட்டது.

இதில், "இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்” என்ற தலைப்பில் நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானம் குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் உரையாற்றினார்.

தொடர்ந்து உறுப்பு நாடுகளின் பிரதி நிதிகள் உரையாற்றினர். பின்னர், சர்வதேச மனித உரிமைகள் மற்றும் சிவில் அமைப்புகள் அறிக்கைகளை சமர்ப்பித்தன.

இந்த நிலையில், இலங்கை தொடர்பான தீர்மானம் இந்த மாதத் துடன் நிறைவுக்கு வருகிறது.

இதனால், புதிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்று வது தொடர்பில் ஆராயப்பட்டது. எனினும், இலங்கையில் தற்போது தேர்தல் நடப்பதால் ஏற்கனவே நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை மேலும் நீடிக்க இணை அனுசரணை வழங்கிய நாடுகள் ஆலோசனை தெரிவித்தன.

எனவே, மனித உரிமைகள் பேரவை யின் கூட்டத் தொடர் நிறைவு நாளான எதிர்வரும் ஒக்ரோபர் 7ஆம் திகதி இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் 51/1 தீர்மானம் வாக்கெடுப்பின்றி காலநீடிப்பு செய்யப்படும் என்று தெரிய வருகின்றது.

ஆனால், இலங்கையின் புதிய அரசாங்கம் உடன்படாது விடின் காலநீடிப்பு தொடர்பில் வாக் கெடுப்பு நடத்த நேரும் என்றும் கூறப் பட்டது. 


அண்மைய பதிவுகள்