பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கணிப்புகளை தவிர்க்குமாறு ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு
2 months ago
இலங்கையில் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனிப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஜோதிட கணிப்புகளைச் செய்வதை தவிர்க்குமாறு அனைத்து ஜோதிடர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு விடுத்துள்ளது.
இதுபோன்ற கணிப்புகளை வெளியிடுவது தேர்தல் சட்டப்படி கடுமையான குற்றமாகும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறான கணிப்புகளை வெளியிடுவோருக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.