முல்லைத்தீவில் ஆசிரியர் தங்கியிருந்த வீடு மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
6 months ago



முல்லைத்தீவு, முள்ளியவளையில் ஆசிரியர் ஒருவர் தங்கியிருந்த வீடு மற்றும் ஆசிரியரின் மோட்டார் சைக்கிள் என்பன இனம் தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டன.
சக ஆசிரியர்களின் உதவியுடன் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட போதும், ஆசிரியர் தங்கியிருந்த வீடு பகுதியளவில் எரிந்துள்ளது.
இதேவேளை, மோட்டார் சைக்கிள் பாவிக்க முடியாத வகையில் முழுமையாக எரிந்து நாசமாகியது.
முள்ளியவளையில் பிரபல பாடசாலையில் கற்பிக்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆசிரியரின் வீட்டிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த ஆசிரியருக்கும், உயர்தர மாணவன் ஒருவருக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்த நிலையில் குறித்த மாணவன் பாடசாலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார்.
பின்னர் மீண்டும் அந்த மாணவனை பாடசாலையில் சேர்த்த நிலையில் நேற்று முன்தினம் இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
