கனடாவின் ஹமில்டன் பகுதியில் வித்தியாசமான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது

2 months ago



கனடாவின் ஹமில்டன் பகுதியில் அண்மையில் வித்தியாசமான கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஆறு பெண்கள் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

25 முதல் 60 வயது வரையிலான ஆறு பெண்கள் கடையொன்றுக்குள் புகுந்து பொருள்களை களவாடியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தை தடுப்பதற்கு முயற்சித்த கடையின் உரிமையாளர் ஒருவரை பெண் ஒருவர் கடித்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

6 பெண்கள் கடைக்குள் பிரவேசித்துள்ளனர்.

ஒரு பெண் கடையில் சிறு பொருள்களை கொள்வனவு செய்துள்ளார்.

ஏனையவர்கள் பல்வேறு பொருள்களை திருடியுள்ளனர்.

இதனை அவதானித்த கடை உரிமையாளர்கள் அந்த பெண்களை தடுக்க முயற்சித்த போது ஒரு பெண் கடை உரிமையாளரை கடித்து தப்பி சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

6 பெண்களும் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண்களில் சிலர் முக்காடு அணிந்திருந்தனர் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய பதிவுகள்