அமைச்சர்களின் இல்லங்களுக்கு வழங்கப்பட்ட 23 நீர் விநியோகங்களிற்கு கட்டணம் செலுத்தவில்லை.-- தேசிய கணக்காய்வு அலுவலகம் அறிக்கை
அமைச்சர்களின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு வழங்கப்பட்டிருந்த 23 நீர் விநியோகங்களில் சுமார் 50 இலட்சம் ரூபாயை கடந்த வருட இறுதியாகும் போதும் பெற்றுக் கொள்ள தவறியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மக்கள் பிரதிநிதிகளிடம் இருந்து செலுத்தப்பட வேண்டிய நிலுவை நீர்க் கட்டணத்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை என பாராளுமன்ற பொதுச் செயலாளர் அறிவித்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகளின் தனியார் வீடுகளில் காணப்படும் நிலுவைத் தொகையை சாதாரண வாடிக்கையாளர்கள் எனக் கருதி பெற்றுக்கொள்வதாக, இந்த நிலுவைத் தொகை தொடர்பில் நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
நிலுவைத் தொகையை செலுத்தத் தவறும் இடங்களில் நீர் வழங்கலை நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட் டுள்ளதாகவும் நீர் வழங்கல் சபை கூறியுள்ளது.
இவ்வாறு கட்டணம் செலுத்தத் தவறி நிலுவையில் காணப்படும் தொகையை பெற்றுக்கொள்ள அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கணக்காய்வு அலுவலகம் பரிந்துரை செய்துள்ளது.