வோர்ன் – முரளி’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அவுஸ்திரேலிய அணி நேற்று (24) இரவு இலங்கை சென்றடைந்தது.

2 months ago



வோர்ன் – முரளி’ டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க அவுஸ்திரேலிய அணி நேற்று (24) இரவு இலங்கை சென்றடைந்தது.

துபாயில் நடந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அவர்கள் துபாயிலிருந்து இலங்கை திரும்பியுள்ளனர்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இடம்பெறும் இந்த இரண்டு போட்டிகள் கொண்ட தொடரின் அனைத்து போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளன.

இதன் முதல் போட்டி எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கு மேலதிகமாக, அவுஸ்திரேலியா அணி இலங்கைக்கு எதிராக இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாட உள்ளனர்.

குறித்த போட்டிகள் பெப்ரவரி 12 மற்றும் 14 ஆகிய திகதிகளில் கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற உள்ளது.