பொலிஸ் அதிகாரமற்ற '13' தீர்வாகாது- இலங்கைத் தமிழ் அரசு கட்சி தெரிவிப்பு.

5 months ago


பொலிஸ் அதிகாரமின்றி 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்துக் கலந்துரையாடி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுவதை முற்றாக நிராகரிப்பதா கவும், அது ஒருபோதும் தமிழர் விரும்பும் அரசியல் தீர்வாக அமையாது எனவும் சுட்டிக் காட்டியுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், இவ்வாறான கருத்துக்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்கள் மத்தியில் அவருக்குப் பாரிய பின்னடைவையே தேடித்தரும் எனவும் கூறினார்.

மறைந்த தமிழ்த் தேசியக் கூட் டமைப்பின் பெருந்தலைவர் இரா.சம்பந்தன் பிரிக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வைக் கோரியதாகவும், தற்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகாரமின்றி, மத்திய அரசாங் கத்திடமிருந்து பெறப்பட்ட வேறு பல அதிகாரங்களுடன் நடைமுறைப்படுத்துவது குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி வருவதாகவும் இரா.சம்பந்தனின் இறுதிக் கிரியை நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் ஜனாதிபதியின் இக்கருத்தை ஒருபோதும் ஏற் றுக்கொள்ளமுடியாது எனத் தெரிவித்த இலங்கைத் தமிழர சுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், அர சியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை பொலிஸ் அதிகார மின்றி நடைமுறைப்படுத்துவது ஓரளவுக்கேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அர்த்தமுள்ள அரசியல் தீர்வாக அமையாது எனச் சுட்டிக்காட்டினார்.

"சம்பந்தன் பிளவுபடாத, ஒருமித்த இலங்கைக்குள் அரசியல் தீர்வினைக் கோரியதாக ஜனாதிபதி கூறுகின்றார். இருப்பினும் அவர் பிளவுபடாத இலங்கைக்குள் தமிழர்களைத் தேசிய இனமாக அங்கீகரிக்கக் கூடிய, சுயநிர்ணய அடிப்படையிலான சமஷ்டி முறையிலான அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வையே கோரினார்.

மாறாக அவர் ஒற்றையாட்சிக்குள் அதிகாரப்பகிர்வைக் கோரவில்லை. அவ்வாறிருக்கையில் பொலிஸ் அதிகாரங்களின்றி 13 ஆவது திருத்தத்தை நடைமு றைப்படுத்துவது குறித்துக் கலந் துரையாடி வருவதாக ஜனாதிபதி கூறுகின்றார். அது ஓரளவுக் கேனும் ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வாக ஒருபோதும் அமையாது.

எனவே உரையில் ஜனாதி பதி வெளியிட்ட கருத்தை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம்" எனவும் சிறிதரன் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி ஏற்கனவே மாகாணங்களுக்கான கல்வி மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த அதிகாரங்கள் மட்டுப்படுத்தப் பட்டிருப்பதாகவும், எனவே மேலும் அதிகாரங்கள் மட்டுப்ப டுத்தப்படுவதை கிஞ்சித்தும் ஏற்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் தமிழ் மக்களை தேசிய இனமாக அங்கீகரித்து, சுயநிர்ண உரிமையை உறுதி செய்யக்கூடிய விதத்தில், சமஷ்டி அடிப்படையிலான அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வை வழங்குவது குறித்து இதயசுத்தியுடன் பேசுவதற்கு ஜனாதிபதி எம்மை அழைத்தால், அப்பேச்சுவார்த் தைகளில் பங்கேற்பதற்கு தமிழரசுக் கட்சி தயாராக இருக்கின்றது எனவும் சிறிதரன் கூறினார். 

அண்மைய பதிவுகள்