கனடாவில் விற்பனை செய்யப்படும் ஒரு வகை பன்றி இறைச்சி வகைகள் குறித்து எச்சரிக்கை

2 months ago



கனடாவில் விற்பனை செய்யப்படும் ஒரு வகை பன்றி இறைச்சி வகைகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த ஜெல்லி போர்க், பன்றி இறைச்சியினால் உருவாக்கப்படும் ஒருவகை உணவு வகையாகும்.

இவற்றில் லிஸ்திரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே Wagener பண்டக்குறியைக் கொண்ட ஹேம் அண்ட் ஜெலி வகைகள் இவ்வாறு சந்தையிலிருந்து மீள பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

24ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் திகதி காலாவதியாகும் என முத்திரையிடபட்ட தொகுதியில் இவ்வாறு லிஸ்ட்டீரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

லிஸ்திரியா தாக்கத்திற்கு உள்ளான உணவு வகைகளில் நிறமாற்றமோ மணமோ தெரியாது எனவும் இதனால் பாதிப்பைக் கண்டுபிடிக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கர்ப்பிணிகள் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை உடையவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு இந்த வகை உணவுகளினால் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த வகை உணவை எவரேனும் கொள்வனவு செய்திருந்தால் அவற்றை உட்கொள்ள வேண்டாம் எனவும் வீசி விடுமாறும் கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

அண்மைய பதிவுகள்