கனடாவில் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
4 months ago

கனடாவில் வாகன திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞன் உட்பட 5 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நோர்த் யோர்க்கை சேர்ந்த 22 வயதான யோகேஷ்குமார், 22 வயதான அஜ்பிரீத் சிங், 23 வயதான கலிடானைச் சேர்ந்த 25 வயதான அம்ரித்பால் சிங், 23 வயதான சுமித் சுமித் ஆகியோர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இந்தக் கும்பல் பொலிஸாரிடம் சிக்கியள்ளது.
கலிடோ பகுதியில் இருந்து திருடப்பட்ட வாகனம் ஒன்று ஒன்ராறியோவுக்குள் பிரவேசித்த வேளையில் அது திருடப்பட்ட வாகனம் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
