பூர்வீகக்குடிகளின் அடையாள மோசடி விவாதங்கள் அரசாங்க அச்சங்களை அடிப்படையாகக் கொண்டவை - பூர்வீகக்குடிகள் நலன்கள் தொடர்பான அமைச்சர் கெரிஆனந்தசங்கரி தெரிவிப்பு

6 months ago

பூர்வீகக்குடிகளின் அடையாள மோசடி என்று அழைக்கப்படுபவை பற்றிய விவாதங்கள் அரசாங்க வரையறை குறித்த அச்சங்களை அடிப்படையாகக் கொண்டவை என்று பூர்வீகக்குடிகள் நலன்கள் தொடர்பான அமைச்சர் கெரிஆனந்தசங்கரி தெரி வித்துள்ளார்.

"சுதேசி அடையாளம் பற்றிய கருத்து வெளிப்படையாக மிகவும் சிக்கலானது. மற்றும் பல நூற்றாண்டு காலனித்துவத்துடன் அது தொடுக்கப்பட்டுள்ளது" என்று கெரி ஆனந்சங்கரி வியாழன் அளித்த பேட்டியில் கூறினார்.

ஒரு பழங்குடி நபர் என்றால் யார், யார் அதில் இல்லை என்பதை வரையறுப்பது உண்மையில் மத்திய அரசாங்கத்தின் பங்கு அல்ல" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பூர்வீக உரிமைகளுக்கான அங்கீகாரம் பெரும்பாலும் மத்திய அரசாங்கத்திடம் இருந்து வருவதால், அவரும் சுதேச சேவைகள் அமைச்சர் பாட்டி ஹஜ்துவும் கூட்டாட்சி அங்கீகாரம் பெற்ற பழங்குடியின மக்கள் முதல் நாடுகள், இன்யூட் மற்றும் மெடிஸ் ஆகிய மூன்று குழுக்களிடமிருந்தும் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

'எந்தவொரு உறவுக்கும் நிலையான உழைப்பும் உரையாடல்களும் தேவை' என் அமைச்சர் ஆனந்தசங்கரி கூறியுள்ளார். 

ஒன்ராரியோ, ஆல்பர்ட்டா மற்றும் சசகெச்சுவானில் உள்ள மெடிஸ் அரசாங்கங்களை அங்கீகரிக்க முற்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய சட்டமூலத்துடன், கடந்த இலையுதிர் காலத்தில், நாடாளுமன்றத்தில் அடையாள மோசடி குறித்து தலைப்பு வெளிவந்தது.

அண்மைய பதிவுகள்