ஈஸ்டர் தாக்குதல் மீதி நஷ்ட ஈட்டை வழங்க 6 வருட காலம் அவகாசம் கேட்கும் முன்னாள் ஐனாதிபதி மைத்திரி
5 months ago
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் வழங்கப்படவிருந்த 100 மில்லியன் ரூபா நட்டஈட்டில் 58 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் எஞ்சிய தொகையை செலுத்துவதற்கு 6 வருட கால அவகாசம் வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.