இந்திய போர் கப்பலைத் தொடர்ந்து சீனாவின் மூன்று போர் கப்பல்கள் அடுத்தடுத்து கொழும்பு வருகை!
7 months ago




சீன கடற்படைக்கு சொந்தமான மூன்று போர்க் கப்பல்கள் நேற்று திங்கட்கிழமை அடுத்தடுத்து கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.
இந்தியாவின் போர் கப்பலான ஐ. என்.எஸ். மும்பை கொழும்பு துறை முகத்தை வந்தடைந்த நிலையில் சீனாவின் இந்த மூன்று கப்பல்களும் கொழும்பை வந்தடைந்தன.
ஹீ பெய், வூசிஷான், ஹைலியான்ஷான் என்று பெயரிடப்பட்ட கப்பல்களே நேற்று கொழும்பை வந்தடைந்தன. ஹீ பெய் கப்பலில் 267 கடற்படையினர் மற்றும் உதவியாளர்களும் வூசிஷான் கப்பலில் 872 பேரும் ஹைலியானஷான் கப்பலில் 334 பேரும் வருகை தந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு வந்த மூன்று போர் கப்பல் களையும் கடற்படை சம்பிரதாயபூர்வ மாக வரவேற்றது. 3 நாள் பயிற்சியின் பின்னர் இந்தக் கப்பல்கள் சீனா திரும்பும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
