கனடிய சுகாதார நிறுவனம் பாலியல் பயன்பாட்டுப் பொருள்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

3 months ago


கனடா டொரன்றோ பெரும்பாக பகுதியில் சுகாதார நிறுவனம் சில பொருள்களைக் கொள்வனவு செய் வது தொடர்பில் எச்சரிக்கை விடுத் துள்ளது.

பாலியல் தேவைகளுக்காக பயன் படுத்தும் உற்பத்தி பொருள்கள் கொள்வனவு செய்வது தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மார்க்கம், மிஸஸாகா, விட்பேய் மற்றும் வுட் பிரிட்ஜ் ஆகிய பகுதிகளில் இருந்து சட்டவிரோதமான அடிப்ப டையிலான 29 வகை உற்பத்திகள் மீட்கப்பட்டுள்ளன.

இவை சட்ட ரீதியான முறையில் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட்ட உற்பத்திகள் அல்ல என தெரிவிக்கப்படுகிறது.

சந்தையில் விற்பனை செய்யப்படும் இந்தப் பொருள்கள் அங்கீகரிக்கப்படாதவை எனவும் சட்டவிரோதமான இந்த உற்பத்திகளை பயன்படுத்தும்  வாடிக்கையாளர்களுக்கு பாரதூரமான சுகாதார கேடுகள் ஏற்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த விடயம் தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயல்பட வேண்டும் என கனடிய சுகாதார நிறு வனம் ஆலோசனை வழங்கியுள்ளது.

மருத்துவ தரப்பினரின்              ஆலோசனை இன்றி இவ்வாறான பொருள்கள் பயன்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்