பலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்களுக்கு வான் கூவர் பல்கலைக்கழகம் அத்துமீறல் அறிவித்தல் அனுப்பியுள்ளது
9 months ago

பலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்களுக்கு வான் கூவர் பல்கலைக்கழகம் அத்துமீறல் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
நாளை திங்கட்கிழமைக்குள் பிரிட்டிஷ் கொலம்பியா நனைமோ வளாகத்தில் உள்ள போராட்ட முகாம்களை அகற்றுமாறு அந்த அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது. ஜூலை 11ஆம் திகதி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டதாகவும், திங்கள்கிழமை காலை 8 மணிக்குள் போராட்டக்காரர்கள் செல்லவில்லை என்றால், 'அவர்களை அகற்ற தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம்' என்றும் பல்கலைக்கழகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் போராட்டக்காரர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டரீதியான சவாலுக்கு பணத்தை வீணாக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் பல்கலைக்கழகத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
