வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு.-- சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவிப்பு
3 months ago

வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை சிறுபோகம் மற்றும் பெரும் போகம் போன்ற நெற் பயிற்செய்கை காலங்களில் எலிக்காய்ச்சல் தொற்று கடந்த காலங்களில் குறிப்பிட்டளவு பதிவாகியிருக்கிறது.
எனினும், 2024 ஆம் ஆண்டு ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரை 41 பேர் எலிக்காய்ச்சல் நோயினால் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் குணமடைந்து தற்போது வீடுகளுக்கு சென்றுள்ளனர் எனவும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
