கனடாவில் குளிரூட்டப்பட்ட வொபல் உணவு பண்டம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பண்டத்தில் லிஸ்திரியா தாக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த உணவுப் பண்டத்தை சந்தையில் இருந்து மீளப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட்ட வொபல்ஸ் வகைகள் ஏற்கனவே இவ்வாறு சந்தையில் இருந்து மீள பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஒரு பின்னணியில் 365 வோல்புட்ஸ் என்ற பண்டக்குறியை கொண்ட வொபல்ஸ் வகைகளையும் சந்தையிலிருந்து மீள பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனடிய உணவுப் பரிசோதனை முகவர் நிறுவனம் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.
இந்த உணவுப் பண்டத்தினால் எவருக்கும் இதுவரையில் நோய்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறெனி முன் எச்சரிக்கை அடிப்படையில் உணவுப் பண்டத்தை சந்தையில் இருந்து மீளப் பெற்றுக் கொள்வதாகவும் இந்த உணவு வகையை பயன்படுத்த வேண்டாம் எனவும் கனடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.