மறைந்த இந்தியத் திரைப்பட நடிகர் கப்டன் விஜயகாந்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு யாழ் நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள்

1 week ago



மறைந்த இந்தியத் திரைப்பட நடிகர் கப்டன் விஜயகாந்தின் ஓராண்டு நினைவை முன்னிட்டு யாழ்ப்பாணம் நகரின் பல பகுதிகளிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நடிகர், அரசியல்வாதியாகச் செயற்பட்ட காலத்தில் ஈழத் தமிழர்கள் மீதும், அவர்களின் போராட்டம் மீதும் அதிக பற்றுடனும் உணர்வுடனும் செயற்பட்ட ஒருவர் என்ற வகையில் ஈழத் தமிழர்களின் மனங்களில் கப்டன் விஜயகாந்த் இடம்பிடித்திருந்தார்.

ஈழத் தமிழர்களின் போராட்ட ஆர்வம் காரணமாகத் தனது மகனுக்குப் பிரபாகரன் என்ற பெயரையும் விஜயகாந்த் சூட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது,

அண்மைய பதிவுகள்