சீனாவின் புதிய அணு சக்தி நீர்மூழ்கி முழுமையாக கடலில் மூழ்கியது.

3 months ago


சீன கடற்படையில் 234 போர்க் கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட 370 கப்பல்கள் உள்ளன.

அந்த நாட்டு கடற்படையில் மொத்தம் 60 நீர்மூழ்கிகள் உள்ளன. இதில்12 நீர்மூழ்கிகள் அணு சக்தியில் இயங்கக் கூடியவை.

இந்த நிலையில், கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சீன கடற்படையின் நீர்மூழ்கி கடலுக்கு அடியில் பாறையில் மோதியது. இதில் மொத்தம் 55 பேர்               உயிரிழந்தனர்.

இந்த விபத்து, உயிரிழப்பு குறித்து சீன அரசு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்தச் சூழலில் சீனாவின் புதிய அணு சக்தி நீர்மூழ்கி முழுமையாக கடலில் மூழ்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், சீனாவின் வூஹான் நகர் அருகே அந்த நாட்டின் கப்பல் கட்டுமான தளம் உள்ளது.

கடந்த மார்ச் மாதம் சீன         கடற்படையின் புதிய அணு சக்தி நீர்மூழ்கி வூஹான் தளத்தில் நங்கூரமிட்டி ருந்தது.

அமெரிக்காவின் மேக் சர் டெக்னாலஜிஸ் நிறுவனம் கடந்த மார்ச் 10ஆம் திகதி எடுத்த செயற்கைக்கோள் படத்தில் சீன நீர்மூழ்கி இடம்பெற்றிருந்தது.

கடந்த மே 16ஆம் திகதி                 அமெரிக்காவின் பிளானட் லேப்ஸ் எடுத்த செயற்கைக்கோள் படத்தில் சீன நீர்மூழ்கியை காணவில்லை.

அந்த நீர்மூழ்கி கடந்த மே அல்லது ஜூன் மாதத்தில் கடலில் முழுமையாக மூழ்கியுள்ளது.

அணு எரிபொருள் இருந்திருந்தால் நிச்சயமாக கதிர்வீச்சு ஏற்பட்டிருக்கும்.

புதிய அணு சக்தி நீர்மூழ்கி கடலில் மூழ்கியதை சீன அரசு இதுவரை மறைத்து வருகிறது.

சீன நீர்மூழ்கிகளின் வலிமை கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது" இவ்வாறு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.