ஆடை ஏற்றுமதி வருவாய் 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும்.--ஆடைத் கைத்தொழில் சங்கம் தெரிவிப்பு
1 month ago
இந்த ஆண்டு ஆடை ஏற்றுமதி வருவாய் ஆண்டின் இரண்டாம் பாதியில் அதன் ஆரம்ப இலக்கான 4.5 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த ஆடைத் கைத்தொழில் சங்கம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஆடை ஏற்றுமதி வருவாய் 2022 ஆம் ஆண்டுக்கு இணையாக இருந்தது.
எனினும், 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், ஈட்டிய வருவாயில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை அவதானிக்க முடிந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் ஆடை ஏற்றுமதி வருமானம் 299.1 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த போதிலும், ஓகஸ்ட் மாதத்தில் 485.6 மில்லியன் அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் நேர்மறையான முன்னேற்றம் காணப்படும் நிலையில், தற்போது 5 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டுவதற்காக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.