மாத்தளை - நாவுல, அடவல கிராம மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி வரும் வேட்பாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

4 months ago


மாத்தளை - நாவுல, அடவல கிராம மக்கள் 2024 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கக் கோரி தமது கிராமத்துக்கு வரும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரிக்கை விளம்பரங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். பல ஆண்டுகளாக தங்கள் கிராமத்துக்கு வருகை தந்த அரசியல்வாதிகள் அளித்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனக் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்கள் கிராமத்துக்குச் செல்லும் வீதிகள், விவசாய நிலங்களில் உள்ள பிரச்சினைகள், போக்குவரத்து சிரமம் போன்ற காரணங்களால், இம்முறை தேர்தலை தங்கள் கிராம மக்கள் புறக்கணிக்கவுள்ளதாகக் கூறுகின்றனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல்வாதிகள் தங்கள் கிராமத்திற்கு வரவேண்டாம் என்றும் அவ்வாறு வந்தால் தாங்கள் பதில் சொல்லத் தயார் என்றும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.