ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தண்ணிமுறிப்பு ஆண்டான்குள மக்களை மீள்குடியேற்றவும். எம்.பி து.ரவிகரன் வலியுறுத்து
ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் தண்ணிமுறிப்பு ஆண்டான்குள மக்களை மீள்குடியேற்றவும். எம்.பி து.ரவிகரன் வலியுறுத்து
ஆக்கிரமிப்புக்குள் இருக்கும் கரைதுறைப்பற்றுப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட தண்ணிமுறிப்பு ஆண்டான்குள மக்களை மீள் குடியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு, கரைதுறைப்பற்று பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
தண்ணிமுறிப்பு மற்றும் ஆண்டான் குளம் ஆகிய கிராமங்களின் மக்கள் இதுவரை மீள்குடியமர்த்தப்படவில்லை.
1984ஆம் ஆண்டு அந்தப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்தனர். இதுவரை அவர்கள் மீள்குடியமர்த்தப்படவில்லை.
அந்தப் பகுதி மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியமரத் தயராக உள்ளனர்.
தங்களை மீள்குடியமர்த்த வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தங்கள் மீள்குடியமர்வைத் தடுத்து, அந்தப் பகுதிகளில் வேறு குடியேற்றங்களை மேற்கொள்ளத் திட்டமிடப்படுகின்றதா என்ற அச்சத்துடனேயே அந்த மக்கள் உள்ளனர்.
அந்த மக்களை அவர்களின் சொந்த இடத்தில் மீள்குடியமர்த்த புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்-என்றார்.