வேப்ப மரங்களை மூல வளமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் குறித்து வடக்கு ஆளுநருடன் புவனகுமார் கலந்துரையாடினார்
வெப்ப மண்டலத்துக்குரியதான வேப்ப மரம் வடக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் பரவலாகக் காணப்படுகின்றது.
வட மாகாணத்தில் காணப்படும் வேப்ப மரங்களை மூல வளமாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் குறித்து ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுடன் புலம்பெயர் தமிழர் சுந்தரமூர்த்தி புவனகுமார் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தியாவின் மும்பையை தலைமை அலுவலகமாகக் கொண்ட, உலக வேம்பு அமைப்பில் உறுப்புரிமை பெற்றுள்ள புவனகுமார், வேப்ப மரத்தைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யக் கூடிய சூழல் நேய உற்பத்திகள் தொடர்பான ஈடுபாட்டைக் கொண்டுள்ளார்.
வேப்பம் எண்ணெயிலிருந்தான மாதிரி உற்பத்திகள் பலவற்றை பரீட்சார்த்தமாக மேற்கொண்டுள்ள அவர் தனது உற்பத்திகள் தொடர்பில் ஆளுநருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
வடமாகாணத்தில் வேப்ப மரங்களை இயற்கைச் சூழல்நேயமான வளமாகப் பயன்படுத்தி, பொருளாதார அபிவிருத்திக்குப் பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடியதுடன்,
இலங்கையில், உலக வேம்பு அமைப்பின் ஒத்துழைப்புடன், வேப்ப மரத்தின் பலன்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கேற்ற செயல்பாட்டுத் திட்டமிடலைச் செய்து நடைமுறைப் படுத்துவதற்கான ஒத்துழைப்பையும் பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டதாக புவனகுமார் குறிப்பிட்டார்.
மேலும், ஆளுநருடனான கலந்துரையாடலில், சிறுதானிய பெறுமதிசேர் உற்பத்திகளில் ஈடுபட்டுவரும் சிவகுமார் நிரோசனும் கலந்துகொண்டார்.