கொழும்பு, நீதிமன்றில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்கள் கைது

1 month ago



கொழும்பு, புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த 19ஆம் திகதி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டு உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அதனடிப்படையில், இதுவரை இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் கம்பஹா மற்றும் உடுகம் பொல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததற்காகவும், துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதற்கு முதல் நாள் துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்குத் துப்பாக்கியை வழங்கியதற்காகவும் கம்பஹா, மல்வத்த வீதி, அஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய தமிந்து லக்ஷான் என்ற சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், துப்பாக்கிச்சூடு நடத்திய வரையும் மற்றைய சந்தேக நபரையும் ஓட்டோவில் ஏற்றிச் சென்று தப்பிச் செல்வதற்கு உதவியதற்காக, தமித்அஞ்சன நயனஜித் என்ற 25 வயதுடைய நபரும், உடுகம்பொல, அஸ்கிரியபொல பகுதியைச் சேர்ந்த 19 வயது சாமோத் கிம் ஹான் என்ற இளைஞரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


அண்மைய பதிவுகள்