இந்துக்களின் பாதுகாப்பு குறித்து 140 கோடி மக்கள் ஆழ்ந்த கவலை -செங்கோட்டையில் இந்திய பிரதமர் மோடி.
“அண்டை நாடான பங்களாதேஷில் குழப்பமான சூழல் நீடிக்கிறது. அந்த நாட்டில் வசிக்கும் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து பாரதத்தின் 140 கோடி மக்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். பங்களாதேஷில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும்”- இவ்வாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
டில்லியில் உள்ள செங் கோட்டையில் பிரதமர் தேசிய கொடியேற்றி சுதந்திர தின உரையாற்றினார். இதன்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மதச்சார்பற்ற சிவில் சட்டங்கள் அவசியம் என்றும் அவர் உறுதி படக் கூறினார்.
இந்தியாவின் 78ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப் பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டில்லி செங்கோட்டையில் தொடர்ச்சியாக 11ஆவது முறை தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
1,500 இற்கும் மேற்பட்ட பழமையான சட்டங்கள் ஒழிக்கப்பட்டு, புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
வேளாண்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப் பட்டுள்ளன. தற்போது விவசா யிகளுக்கு எளிதாக கடன் கிடைக் கிறது. அவர்களுக்கான சந்தை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. உலகத்தின் இயற்கை வேளாண்மை உற்பத்திமையமாக பாரதத்தை உருவாக்க உறுதி பூண்டுள்ளோம்.
நாட்டின் சில இடங்களில் பெண்களுக்கு எதிராக இழைக் கப்படும் குற்றங்கள் மனதை காயப்படுத்துகிறது. இத்தகைய குற்றங்களுக்கு எதிராக சமானிய மக்கள் கோபத்தில் கொந்தளிக் கின்றனர். நானும் அதே உணர்வில் இருக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க மாநில அரசுகள் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொடூர குற்றம் இழைப்பவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கலாம்.
ஒரு காலத்தில் ஆயுதங்களை இறக்குமதி செய்து கொண்டி ருந்தோம். இப்போது ஆயுதங்க ளையும் பாதுகாப்பு தளவாடங் களையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறோம். இந்த துறையில் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
உலக நாடுகளை ஒப்பிடும் போது பாரதத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தொழில் துறையில் அபார வளர்ச்சி அடைய வேண்டும். உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் பாரதத்தில் முதலீடு செய்து வருகின்றன. அந்நிய முதலீடுகள் பெருகினால், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். வாரிசு அரசியல், சாதி அரசியல் நாட்டின் ஜனநாயகத் துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக எழுந்துள்ளன.
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதில் அரசமைப்பு சாசனம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏழை, எளிய மக்கள், தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் பாதுகாவலனாக அரசமைப்பு சாசனம் விளங்குகிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல்" திட்டத்தை செயல்படுத்த செங்கோட்டையில் இருந்து அழைப்பு விடுத்தேன் - என்றார்.