தமிழை மறப்பவர்கள் தாயை மறந்தவர்கள்

தமிழ்நாட்டில் உள்ள பெயர்ப் பலகைகள் எல்லாம் ஆங்கிலத்தில் காட்சியளிக்கின்றன. அமெரிக்காவில் உள்ள பெயர்ப் பலகைகள் எல்லாம் ஆங்கிலத்தில் காட்சியளிக்கின்றன. அவர்கள் தங்கள் தாய் மொழியை மதிக்கிறார்கள். தமிழர்கள் தாய் மொழியை அசிங்கம் என நினைக்கிறார்களா?

"தமிழா நீ பேசுவது தமிழா, அம்மாவை மம்மி என்று அழைத்தாய், அப்பாவை டாடி என்று அழைத்தாய்" என்று கவிஞர் காசியானந்தனின் பாடல் நினைவில் வருகிறது.

தமிழனா என்று தமிழனே இலக்காரமாகப் பார்க்கின்ற நிலைமை இன்றும் இருக்கிறது. தமிழில் கதைத்தால் தம்மை தரக்குறைவாக நினைப்பார்கள் என்று ஆங்கில மொழியில் பேசுபவர்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உண்மையில் அவர்கள் தாய் மொழியான தமிழில் கதைக்காமல் விட்டு தமது தாயை தாமே கேவலப்படுத்துவது தெரியவில்லையா?.

ஆங்கிலம் ஒரு மொழி, ஆங்கிலத்தில் பேசினால் தான் கெளரவம் என்று நினைக்கிறார்கள். ஆங்கில மொழியை தெரிந்து வைத்திருப்பது அவசியம். ஆனால் தமிழ் தெரிந்தவருடன் ஆங்கில மொழியில் பேசுவது தமது தமிழ் மொழியை தாமே குறைவாக நினைப்பதற்கு சமன்.

தமிழ்நாட்டில் மலிகைக் கடை ஒன்றில் அரிசி வாங்குவதற்காக சென்ற போது, அங்கே அரிசி தமிழ் சொல் என்பது தெரியாத கடைக்காரர் றைஸ் (Rice) என்று தமிழில் சொல்லப்பா என்று சொன்னார்.

கடைக்காரருக்கு தமிழை மறக்க வைத்ததுடன் ஆங்கிலத்தை தமிழ் மொழி என்று பேச வைத்திருக்கிறார்கள்.

தமிழ் மொழியின் முக்கியம் தமிழ் இனத்தை அழியாமல் பாதுகாக்கும். தாய் மொழியான தமிழ் மொழி ஏனைய பாடங்களை விட முன்னணியில் இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் தமிழ் மொழி பாடத்துக்குத்தான் இன்று ஆபத்து வந்துள்ளது.

யாழ்.வலிகாமம் வலயத்தில் முற்று முழுதாக தமிழ் சூழலில் பிறந்து, முன்பள்ளி தொடங்கி கல்விப் பொது தராதரப் பரீட்சை எழுதும் வரையும் அதாவது 12 வருடங்கள் தாய் மொழியை கற்று வளர்கின்ற 2448 மாணவர்களில் அந்த மொழியில் 808 மாணவர்களால் 40 புள்ளிகள் பெறமுடியவில்லை என்றால் எங்கே தவறு நடக்கின்றது?

முதலாம் வகுப்பு ஆசிரியர் கற்பிக்காது தவறு விட்டிருந்தால், அதே தவறை 2 ஆம் வகுப்பு ஆசிரியரும் செய்வாரா? இவ்வாறான நிலையை பொறுப்பாசிரியர்கள், அதிபர்கள், கல்வித் திணைக்களம், பழைய மாணவர் சங்கம், ஏன் என்று கேட்கவே மாட்டார்களா? தாய் மொழியில் சித்தியடையாத மாணவர்களின் பெற்றோர்களுக்கு இந்த நிலைமைக்கு காரணம் தெரியுமா.?

தமிழ் ஆசிரியர்கள் என்ன செய்கிறார்கள், தமிழ் பாடத்தை கற்பிப்பதில் தயக்கம் காட்டுகிறார்களா? அல்லது தமிழ் பாடம் தானே மாணவர்கள் படித்து விடுவார்கள் என்று முக்கியத்துவம் கொடுக்காமல் விட்டுவிட்டார்களா? இதில் தான் பிரச்சினை எழுகிறது. சாதாரணமாக விட்டுவிட்டால் அசாதாரணமாக போய் விடும்.

தமிழ் மொழியை மறந்து நாகரீகம் என்று ஆங்கில மொழியை அறிந்து வேறு இனத்துடன் ஒட்டி இருக்க முடியாது. தமிழ் இனத்துக்குத் தான் அசிங்கம். 93 A/L வட்சப் குறூப் ஒன்று இருக்கிறது. அந்தக் குறூப்பில் இருப்பவர்கள் தமிழர்கள். ஆனால் தமிழில் ஒரு மசேச்சையும் காணவில்லை. ஆங்கிலத்தில் தான் மசேச் பண்ணுகிறார்கள்.

ஆங்கிலம் கலந்து திரைப்படப் பாடல் எழுதமாட்டேன் என்று தமிழில் திரைப்படப் பாடல் எழுதி வரும் தமிழ்நாட்டுக் கவிஞர் அறிவுமதி ஒரு தமிழ் பட்டதாரி.

அவருக்கு ஆங்கிலம் தெரியும், ஆனால் தமிழ்நாட்டில் தமிழில் தான் பேசுவேன் என்று வாழ்கிறார்.

தமிழில் பெயர்ப் பலகைகளை நாட்டுமாறு பெரிசுகள் ஏன் சொன்னார்கள். தமிழ் சொற்கள் அழிந்து போகும் காலம் உருவாகும் என்ற அச்சத்தால் ஆகும். பொத்தகம், வைப்பகம், வெதுப்பகம், குளிர்களி, ஆடையகம், என்று நல்ல தமிழ் பெயர்கள் இருக்கின்றன.

புலம்பெயர்ந்தவர்கள் அவர்கள் இருக்கும் நாடுகளுக்கு ஏற்ப பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிறார்கள். அது குறையில்லை வீட்டில் வளர்க்கும் நாய்க்கும் பிள்ளைக்கும் ஒரே பெயரை சூட்டுகிறார்கள் அதை முதலில் நிறுத்துங்கள்.

அண்மைய பதிவுகள்