கல்வித் திணைக்களம் எப்பொழுது திருந்தும்.
வாங்கும் கூலிக்கு வேலையைச் செய்யாமல் இருந்து கொண்டு ஒருவரின் திறமையை மழுங்கடிக்கிற வேலையை வடமாகாண கல்வி அதிகாரிகள் சரியாகச் செய்யினமாம், கல்வி அதிகாரி ஒருவரின் பரீட்சை விண்ணப்பத்தை வலயக் கல்விப் பணிப்பாளர் அனுப்பாமல் தடுத்து வைத்து, அந்த கீழ் நிலை அதிகாரியின் 12 வருட பதவி உயர்வுக்கு ஆப்பு வைத்துள்ளதாக அதிகாரி தனது நண்பனிடம் புலம்பி அழுதுள்ளார்.
பொறுப்பாக இருப்பவர்களே கவலையில்லாமல் இருக்கின்றனர். பொதுச்சேவை ஆணைக்குழு, மேல் நிலை அதிகாரிக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுமதி கொடுத்தும் நடவடிக்கை எடுக்க மனமில்லை கூட்டுக்களவு.
வடமாகாண கல்வித் திணைக்களத்தில் வேலை செய்த மனுசி ஒன்று "கண்ணை மூடி கையெழுத்து வைப்பார்" என்று சொன்னது சமூக வலைத்தளங்களில் நெருப்பு ஓட்டம் ஓடிச்சே, எல்லோருக்கும் தெரியும். சொன்ன அந்த மனுசியை இடமாற்றிவிட்டு வடமாகாண கல்விப் பணிப்பாளர் மீது விசாரணை எடுக்கவில்லை.
அரசினர் சுற்றுலா விடுதியில் வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் தண்ணியடித்து போட்ட குத்தாட்டத்துக்கு இன்னும் குத்து விழலை, தகவல் அறியும் சட்ட மூலத்தை பயன்படுத்தி தகவல் அறிய முற்பட்ட ஊடகவியலாளர் ஒருவருக்கு இன்னும் தகவல் வழங்கவில்லை.
வன்னிப் பிரதேசத்தில் ஒரு பாடசாலையில் கன்ரீன் நடத்திய அம்மணிக்கு அடிச்சது யோகம் என்று பார்த்தால், காணியை அம்மணிக்கு எழுதிக் கொடுத்த பாடசாலை அதிபரின் களவு பிடிபட்டு தூரப் பாடசாலைக்கு இடமாற்றம் பெற்ற சம்பவமும், அம்மணியின் பரிதாபமும் சந்தைக்கு வந்தது.
கல்வி அதிகாரியின் செல்வாக்கில மீண்டும் அருகில் உள்ள பாடசாலைக்கு அதிபர் ஆனார், பிறகென்ன மீண்டும் மிடுக்கேறியது.
மணிவிழா எனக்கூறி முறைகேடு செய்த சில ஆசிரியர்களிற்கு ஆசீர்வாதம் வழங்கினார்.
பாடசாலை மணிவிழா நிதிமோசடி தொடர்பில் தகவல் அறிவதற்காக ஒரு ஊடகவியலாளர் தகவல் அறியும் சட்ட மூலத்தைப் பயன்படுத்திய போது 8 பக்கத்தில தூசண வார்த்தைகளால் எழுதி ஊடகவியலாளரின் வீட்டுக்கு அனுப்பி வைத்த ஆசிரியர்.
யாழில் ஒரு வலயத்தில் இருந்த இந்த அதிகாரி, இந்த மணிவிழா இடம்பெற்ற பாடசாலை அமைந்த வலயத்திற்கு வந்தும் திருந்தலை.
தறுதலைதான் திருந்தாது, இவர் படிச்ச மனிசன் எல்லோ, எப்படி திருந்தாமல் இருப்பார்?, அப்படி என்றால் மேலிடம் கொடுத்த ஊக்குவிப்புதான், அதுதான் கண்டும் காணாமல் இருப்பது படிப்பை கண்டவருக்கு அழகில்லை.