யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரிப்பு.--சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவிப்பு

1 week ago



யாழ்.மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கம் அதிகரித்து கடந்த ஆண்டில் மாத்திரம் ஆயிரத்து 890 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஒரு இறப்பு பதிவாகியுள்ளதாகவும் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய்த்தாக்கம் நவம்பர் மாதம் முதல் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

நவம்பர் மாதத்திலே 134 நோயாளர்களும் டிசெம்பர் மாதத்திலே 241 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

டிசெம்பர் மாதம் மூன்றாவது வாரத்தின் பின்னர் டெங்குநோயின் தாக்கம் தீவிரமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

டிசெம்பர் மாதம் 25 ஆம் திகதிவரை 18 நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளார்கள்.

அதன் பின்னர் 28ஆம் திகதி 8 நோயாளர்களும் 29 ஆம் திகதி 12 நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளார்கள்.

எனவே டெங்கு பரவலைத் தடுக்க விசேட கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் - என்றார். 

அண்மைய பதிவுகள்