நேபாளத்தில் காட்டும் தீர்த்த கனமழை வெள்ளப் பெருக்கால் நேபாளத்தில் 40 பேர் உயிரிழப்பு

3 months ago


நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அங்கு தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி இதுவரை 40 பேர் உயிரிழந்தனர், 11 பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேபாளத்தில் கடந்த வெள் ளிக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படலாம் என பேரிடர் மேலாண்மை அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்தனர்.

இதன்படி பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது. தலைநகர் காத்மண்டுவில் 226 வீடுகள்        வெள்ளத்தில் மூழ்கின.

இங்கு 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தாபூரில் 6 பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.மற்ற இடங்களிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன.

இதுவரை நேபாளத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது.

பலரை காணவில்லை. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நேபாளம் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடு பட்டுள்ளனர்.

அவர்களுடன் உள்ளுார் மக்களும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

அண்மைய பதிவுகள்