பொதுநலவாய அமைப்பின் சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கை வந்துள்ளதாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
8 months ago

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான திட்டமிடல் தொடர்பில் ஆரம்ப ஆய்வுகளை மேற்கொள்வதற்காக பொதுநலவாய அமைப்பின் சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கை வந்துள்ள தாக பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் சூழ்நிலை கள் குறித்து அவர்கள் பிரதிநிதித்து வப்படுத்தும் வெளிநாட்டு மையத் துக்கு அறிக்கை அனுப்பவுள்ளனர் .
அதேவேளை மேலும் 3 சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழுக்க ளும் இலங்கைக்கு வரவுள்ளன. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ள 3 அரசியல் கட்சிகள் பவ்ரல் அமைப்பினால் தயாரிக்கப்பட்ட விஞ்ஞாபனத்தை ஏற்றுக்கொண்டு அதில் கூறப்பட் டுள்ளபடி செயற்படுவதற்கு இணக் கம் தெரிவித்துள்ளன என்றும் பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியா ராச்சி தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
