கனடாவின் புதிய பிரதமர் யார் என்பதை ஆளும் லிபரல் கட்சி மார்ச் 9 ஆம் திகதி அறிவிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த விடயத்தை ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் சச்சித் மெஹ்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
புதிய பிரதமர் யார் என்பதை அறிவிக்கும் வரை ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக நீடிப்பார்.
இந்நிலையில் லிபரல் கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கனடாவில் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த திங்களன்று தனது பதவிவிலகல் முடிவை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து புதிய பிரதமரை ஆளும் லிபரல் கட்சி தெரிவு செய்வதற்கான செயல்முறையில் ஈடுபட்டுள்ளது.
வலுவான மற்றும் பாதுகாப்பான நாடு தழுவிய செயல்முறைக்குப் பின் கனடாவின் லிபரல் கட்சியானது மார்ச் 9ஆம் திகதி ஒரு புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
தற்போது தெரிவு செய்யப்படும் பிரதமர் கனடா வரலாற்றிலேயே மிகக் குறைந்த காலம் பதவியில் இருந்த பிரதமராக அறிவிக்கப்படுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.