யாழ்.அச்சுவேலி - உலவிக்குளம் ஆலய உப தலைவர் தனது தொழில் நிமித்தமாகச் சென்று கொண்டிருந்தபோது, அவரைமேற்படி ஆலயத்துக்கு முன்பாக இடைமறித்த ஐவர் அடங்கிய குழுவினர் அவர் மீது கோடரியால் வெட்டித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
மேற்படி ஆலயத்துக்கு முன்பாக இடைமறித்த ஐவர் அடங்கிய குழுவினர் அவர் மீது கோடரியால் வெட்டித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றுக்காலை இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த அவர், அச்சுவேலிப் பிரதேச மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த ஐவர் அடங்கிய குழுவினரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தாக்குதல்தாரிகள் தங்களின் முகங்களை துணிகளால் மூடிக்கட்டியிருந்தனர் என்று பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.