இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், ஆசனத்தைக் கைப்பற்றிய ஒரேயொரு சுயேச்சைக் குழு என்ற சிறப்பை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் ஊசி சின்னத்தில் போட்டியிட்ட மருத்துவர் அர்ச்சுனா தலைமையிலான சுயேச்சைக் குழு - 17 தரப்பினர் பெற்றுள்ளனர்.
இலங்கையில் வேறு எந்தப் பகுதியிலும் சுயேச்சைக் குழுவொன்று ஆசனம் எதையும் கைப்பற்றவில்லை.
27 ஆயிரத்து 855 வாக்குகளை அர்ச்சுனா தலைமையிலான அணியினர் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.