ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் கைது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் தங்காலை குற்றப் புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பிளின்ட்லாக் ரக துப்பாக்கி மற்றும் வெற்று தோட்டாக்களுடன் மித்தெனிய பிரதேசத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஜுலம்பிட்டிய, கல்பொத்தேய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டில் மறைந்திருக்கும் மித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் உத்தரவின் பேரில் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான பிரபாத் இந்திக்க காயமடைந்து எம்பிலிப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.