பிரித்தானிய (UK) சமூக முன்னேற்ற மையத்தின் மரபுரிமை அலகின் நிதிப்பங்களிப்பு, யாழ். மரபுரிமை மையத்தின் அனுசரணையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வின் நிறைவு விழா இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வானது, நேற்றைய தினம் (20.07.2024) யாழ். (Jaffna) பண்பாட்டு மையத்தில், வாழ் நாள் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, ஆனைக்கோட்டை அகழ்வாய்வு குறித்த அனுபவ பகிர்வும், அகழ்வு பணியில் பணியாற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவமும் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், இந்நிகழ்வில் ஜேர்மன் தொல்லியலாளர் கலாநிதி அரியானி, பிரதம விருந்தினராக மருத்துவ பீட முன்னாள் பீடாதிபதி, தொல்லியல் திணைக்கள முன்னாள் பணிப்பாளர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், யாழ் பல்கலைக்கழக தொல்லியல் மற்றும் கலாசார சுற்றுலாத்துறை மற்றுமம் மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.