காற்று மாசுப்பாட்டால் 2021ஆம் ஆண்டில் 81 இலட்சம் மக்கள் உயிரிழந்தனர். இதில் சீனா, இந்தியாவில் அதிக அளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
சுகாதார விளைவுகள் நிறுவனம் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் அமைப்பு சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெற்கு ஆசியாவில் இறப்புக்கான முக்கிய காரணமாக காற்று மாசுபாடு உள்ளது.
அத்துடன், இரத்தம் அழுத்தம், உணவு சரியாக சாப்பிடாமல் இருப்பது மற்றும் புகையிலை பாவனை என்பனவும் உயிரிழப்புகளுக்குக் காரணமாக உள்ளன.
இந்தியாவில், 5 வயதுக்கு கீழுள்ள சிறுவர்கள் மட்டும் ஒரு இலட்சத்து 69 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்தனர். இந்தியாவுக்கு அடுத்து நைஜீரியாவில் ஒரு இலட்சத்து 14 ஆயிரத்து 100, பாகிஸ்தானில் 60 ஆயிரத்து 100, எத்தியோப்பியாவில் 31 ஆயிரத்து 100 சிறுவர்கள் காற்று மாசால் உயிரிழந்தனர்.
ஒட்டுமொத்தமாக சீனாவில் 23 இலட்சம் பேரும், இந்தியாவில் 21 இலட்சம் பேரும் உயிரிழந்தனர்.
இந்த இரு நாடுகளும் சேர்த்து உலகில் காற்றால் மரணமடைந்தவர்களின் சதவீதம் 54ஆக உள்ளது.
மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. அங்கு 2 இலட்சத்து 56 ஆயிரம் பேர், பங்களாதேஷில் 2 இலட்சத்து 36 ஆயிரத்து 300 பேர், மியன்மாரில் ஒரு இலட்சத்து 16 ஆயிரம் பேரும் உள்ளனர்.