அமெரிக்க அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்ததை கொண்டாடும் விழாவில், ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்தைக் கொண்டாடும் விழாவில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி.
ஆசிய, அமெரிக்க, பசிபிக் தீவு வாசிகளின் வெற்றி நிதியம் அமைப்பு அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
ஏ.ஆர்.ரகுமான் நேரடி இசை நிகழ்ச்சி குறித்து அந்த அமைப்பு கூறுகையில்,
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க தருணத்தை ஏ.ஆர். ரகுமானுடன், உலகத் தரம் வாய்ந்த நேரடி இசை நிகழ்ச்சியுடன் இணைந்து கொண்டாட உள்ளோம் என்று தெரிவித்துள்ளது.
நிகழ்ச்சிக்கான திகதி குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அதே போல் ஏ.ஆர்.ரகுமான் தரப்பிலும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதேவேளை கமலா ஹாரிசுக்கு ஆதரவாக 30 நிமிட நிகழ்ச்சி வீடியோவை ஏ.ஆர்.ரகுமான் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.