சைவ மக்கள் பெரும்பான்மையாக வாழும் மருதங்கேணி எல்லைகளை அபகரிக்க சதி- பிரதேச மக்கள் குற்றச்சாட்டு.

4 months ago


யாழ்.வடமராட்சிக் கிழக்கின் நிர்வாக தலைமையிடமாக இருக் கும் வரலாற்றுப் பாரம்பரியமிக்க மருதங்கேணி கிராமத்தின் எல்லைகளை ஆக்கிரமிக்கும் சதி முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக மருதங்கேணி மக்களுக்கும் பொது அமைப்புக்களும் தொடர்ச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

மருதங்கேணி கிராம சேவகர் பிரிவில் இருந்து தனி கிராம சேவகர் பிரிவாக தங்களை அடையாளப்படுத்த வேண்டும் என்று வடமராட்சிக் கிழக்கின் தாளையடி கிராம மக்கள் கோரி யிருக்கிறார்கள். இந்தக் கோரிக் கைக்கு மருதங்கேணி மக்களும், பொது அமைப்புக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. தாளையடி மக்களின் தனி உரிமை சார்ந்து அவர்களின் தனிக் கிராமக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாளையடி கிராமம் என்பது, கத்தோலிக்க மதத்தினர் வாழும் பகுதியாகும். அதன் நிலப்பரப்பு மிகவும் சிறியது. தற்போது, அங்கு 141 குடும்பங்களே வாழ்ந்து வருகின்றனர். ஆனால், தாளை யடியை தனிக் கிராமமாக மாற்றும் முயற்சிகளின் போக்கில், மருதங்கேணியின் பெரும் நிலப் பரப்பை ஆக்கிரமிக்கும் சதி முயற்சிகளை, வடமராட்சிக் கிழக்கின் பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தியும் இன்னும் சில தரப்பினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர் என பிரதேசவாசிகள் குற்றம்சு மத்துகிறார்கள்.

இது தொடர்பில் மருதங்கேணி பிரதேச மக்கள் தெரிவிக்கையில்-மருதங்கேணி கிராமத்தில் 95 வீதமான மக்கள் சைவ சமயத்தை பின்பற்றுபவர்கள். அவர்களின் கோவில்கள், வளவுகள், வயல்கள், கடற்கரை உள்ளிட்ட பெரும் பகுதிகளையும் ஆக்கிரமித்து தான்தோன்றித்தனமாக எல்லைகளை வரையறுத்து தாளையடியாக அறிவிக்கும் வகையிலான கடிதமொன்றை, வடமராட்சிக் கிழக்கின் பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி, யாழ்ப்பாண மாவட்டச் செயலாளருக்கு எழுதியிருக்கின்றார். கடந்த யூலை மாதம் 07ஆம் திகதி குறித்த கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எல்லைகள் தொடர்பில், மருதங்கேணி மக்களுடன் எந்தவித கலந்துரையாடல்களையும் செய் யாது. இரகசியமான முறையில், பிரதேச செயலாளர் எல்லைகளை வரையறை செய்துள்ளார். இந்த சதி முயற்சிக்கு எதிராக மருதங்கேணி மக்கள் வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகத்தின் முன்னால், தொடர்ச்சியாக இரு நாட்கள் போராட்டங்களை நடத்தினார்கள். அப்போது, பிரதேச செயலாளர், தாளையடி கிராமத்துக்கான எல்லைகளை வரையறுத்து தான் எந்தவித கடிதங்களையும் மாவட்டச் செயலாளருக்கு எழுதவில்லை என்று பொய் கூறினார். ஆனால் அவர் எழுதிய கடிதத்தின் பிர திகளை, மருதங்கேணி மக்கள் அவரிடம் காண்பித்து விளக்கம் கோரிய போது, அவர் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார். இந்த அதிகார துஷ்பிரயோகம் பாரம்பரிய சிறப்புமிக்க மருதங்கேணியின் மீது விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தலாகும்.

மருதங்கேணி கிராம எல்லைக்குள், வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலகம், பிரதேச வைத்தியசாலை, பொது விளையாட்டு மைதானம் போன்ற முக்கிய பகுதிகள் உள்ளடங்குகின்றன. ஆனால், தாளையடி கிராமத்துக்கான எல்லையைாக, தான்தோன்றித்தனமாக பிரதேச செயலாளர் குறித்துள்ள எல்லைகள் மருதங்கேணிக்குள் இருக்கும் மேற்கண்ட முக்கிய நிறுவனங்கள், மற்றும் பிரதேசங்களையும் தாளையடியாக அறிவிக்கும் நோக்கிலான கபடத்தனத்தை கொண்டிருக்கின்றது. தாளையடி தனிக் கிராமத்துக்கான எல்லை வரையறை தொடர்பில், மருதங்கேணி மக்களுடன் எந்தவித கலந்துரையாடலும் பிரதேச செயலகத்தினாலோ, எல்லை வரையறை தொடர்பிலான பிரிவினராலோ மேற்கொள்ளப்படவில்லை. மருதங்கேணி மக்களுக்கு தெரி யாமல், மறைமுகமாக மருதங் கேணியின் பெரும் நிலப்பகுதியை அபகரித்து புதிய கிராமமாக அறிவிக்கும் நோக்கமே. பிரதேச செயலாளரிடத்திலும், அவரோடு இணைந்து இவ்வாறான சதி முயற்சிகளில் ஈடுபடு வோரிடத்திலும் காணப்படுகின்றது. இந்த சதி முயற்சிகளை உடனடியாக நிறுத்துமாறு மருதங்கேணி மக்களும், பொது அமைப்புக்களும் வலியுறுத்துகின்றன.

மருதங்கேணி மக்கள் மத சார்பின்மையோடு சமத்துவம் சகோதரத்துவமும் கொண்ட வாழ்க்கை நெறியைக் கொண்ட வர்கள். அவர்களை, தாளையடி கிராமத்து மக்களோடு முரண்பட்டு மோத வைக்கும் வகையிலான சதித் திட்டமும் மகுதங்கேணி கிராமத்தின் நிலப்பகுதிகளை அபகரித்து தாளையடியாக அறிவிக்கும் சதித்திட்டத்தின் பின்னால் இருப்பதாக மருதங்கேணி மக்கள் அச்சப்படுகின்றனர். இவ்வாறான சதி நடவடிக்கைகளை வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம். சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் ஆகியோர் உட னடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோருகிறோம்.-என்றனர்.