மன்னார் - ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் நேற்று முன்தினம் நடை பெற்றன.

2 months ago

மன்னார் - ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் நேற்று முன்தினம் நடை பெற்றன.

தமிழ் மக்களின் உரிமைக்காக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சார்பில் உயிர்நீத்தவர்களை நினைவு கூரும் மாவீரர் வாரம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகிறது.

இதையடுத்து, ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்ல ஏற்பாட்டு குழுவால் சிரமதான பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன.

மாவீரர்களின் கல்லறைகளுக்கு மலர் தூவி, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு சிரமதான பணிகள் ஆரம்பமாகின.