இந்தியாவில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை அமுல்படுத்த ரூ. 8,000 கோடி தேவை. தேர்தல் ஆணைக்குழு தெரிவிப்பு.

3 months ago


இந்தியாவில் "ஒரே நாடு ஒரே தேர்தல்" திட்டத்தை அமுல்படுத்த   ரூ. 8,000 கோடி தேவை என்று ராம்நாத் கோவிந்த் குழுவிடம் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற - மக்களவை மற்றும் அனைத்து மாநில சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் (ஒரே நாடு ஒரே தேர்தல்) நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ஆராய முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழு கடந்த மார்ச் மாதம் சமர்ப்பித்த அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, இது தொடர்பான (அரசியல் சாசன திருத்த) சட்ட திருத்தம் வரும் பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவிடம் தேர்தல் ஆணைக்குழு ஓர் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமுல்படுத்த போதிய கால அவகாசம் தேவை.

வரும் 2029இல் ஒரே நாடு ஒரே தேர் தல் திட்டத்தை அமுல்படுத்த சுமார் 8000 கோடி ரூபாய் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அண்மைய பதிவுகள்