இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்ற அநுரகுமாரவுக்கு இந்திய தூதர் நேரில் வாழ்த்து!

3 months ago


இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுரகுமார திஸ நாயக்கவை இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா நேற்று நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தியின் பத்தர முல்லையிலுள்ள பணிமனையில் நேற்றைய தினம் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துகளைத் தெரிவித்தது டன், மக்களின் ஆணையை வென்றமைக்காக பாராட்டுகளையும் தெரிவித்தார்.

அத்துடன், பல நாகரிக          ஒற்றுமைகளை கொண்டுள்ள இரட்டையராகவும் நமது இரு நாடுகளினதும் மக்களது செழுமைக்காக உறவுகளை மேலும் வலுவாக்க உறுதிபூண்டுள்ளது - என்றும் அநுரவிடம் தெரிவித்தார்.